kanavukal
Wednesday, 21 March 2012
முத்தம்
இருவரும்
எவ்வளவு பேசினோம்
மொழிகள் வார்த்தைகளற்ற தருணம்
இருவருக்கும்
இடையில் உருவான
புதிய மொழி
அவள் கொடுத்த
முத்தம்
மழழை
கள்ளமில்லா
கண்கள்
போலி இல்லா
சிரிப்பு
பயமில்ல
பாசம்
பண்பறிவில்லா
குணம்
திறமில்லா
கை கால்கள்
தோழி
எங்கோ வாசிக்கப்பட்டது
அவளது பெயர்
என்
மனம் அறியும்
இருந்தும்
கண்களில் தேடல்
அவள்
முகம் காண ...
அப்பா
நான்
உறங்கிக் கொண்டிருந்தேன்
திடிர் விழிப்பு
சின்ன முனங்கள்
கண்களை துடைத்து
இருளினை தடவி
இடம் பெயர்ந்தேன்
அப்பாவிடம் !
அரை மயக்கம்
அசதியான உறக்கம்
வார்த்தைகள் தெளிவில்லை
எனது பெயரை
அப்படி யாரும் உச்சரித்தில்லை
இதுவரை
அம்மா
மழைக்கு கூட
பள்ளி கூடம் ஒதுங்கியத்தில்லயம்
ஆனால்
மொழயின் உச்சரிப்பை
ஒலி பிறழாமல் ஓதியவள்
பல் முளைக்காத பருவம்
கை - காதை தொடவில்லை
இருந்தும்
பாடம் கற்று கொடுத்தாள்
படிக்காத ஆசிரியை
கைக்கு எட்டாத காதை
தொட
மறுநாள்
முதலாம் வகுப்பு சேர்க்கை
Monday, 12 March 2012
மறந்தவை
உன்
பிறந்தநாளுக்கு நான்
கொடுத்த
கவிதை புத்தகத்தில்
ஆசிரியர் மறந்த கவிதை
உன் பெயர்
காதல்
என்
புத்தகத்தின் வெறுமையான
பக்கங்களை
நிரபுவத்ர்க்கவே
உன்னை காதலிக்க வேண்டும்
அழகு
காதல்
அழகானது
காமம் உள்ளவரை மட்டும்
காமம்
அழகானது
கற்பழிப்புகள்
நிகழாத வரை
Tuesday, 28 February 2012
பிழை
எனது
வாழ்க்கையில்
எழுத்து
ப்
பிழை உள்ளது
இல்லக்கண
ப்
பிழை?
தேடித்தான்
பார்க்கவேண்டும் ....
Monday, 27 February 2012
எனது
வாழ்க்கையில்
எழுத்து பிழை உள்ளது
இல்லக்காண பிழை?
தேடித்தான்
பார்க்கவேண்டும் ....
Sunday, 26 February 2012
அவளை
அழகாக்க
நிலாவை
குறை கூறினேன்
Tuesday, 21 February 2012
துடிப்பு
சட்டைப்பையில்
செல்போன் அதிர்வு
நீ அழைப்பதனால் அல்ல
இதய துடிப்பால், உனக்கும்
அதனாலதான்
அதிர்கிறது
இப்பொழுது
உன் அழைப்பால்
Sunday, 19 February 2012
அவள்
என்
கைகோத்து
நடைப்போட்டது
கொஞ்சம் கொஞ்சமாக
ஆயுள் ரேகையை
அளிபத்ர்ககவா
கிறுக்கல்கள்
நான்
இரசித்து கிறுகிய
கிறுக்கல்கள்
புனையா ஓவியம் போல்
அவளையே
பிரதிபலித்தது
Wednesday, 15 February 2012
முகம் காண
ஆசை
முடியாததால்
மொபைலின் முன்
ஸ்கிரின் சேவராக
அவளது புகை படம்
Tuesday, 14 February 2012
வழி
காதல்
அழகாக
வழி காட்டியது
கல்லறைக்கு
Thursday, 9 February 2012
hi
புதைக்க பட்டவைகளில்
முளைதவைகள் மட்டுமே
விதைகள்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)