Monday 3 August 2020

தோற்பது எனக்கு மிகவும் பிடிக்கும்
யாரிடம் என்ற வினாவிற்கு
விடையாக
அம்மாவிடம்  அன்பு
அப்பாவிடம் அனுபவம்
தம்பியிடம் அரவனைப்பு
நண்பனிடம் நம்பிக்கை
ஆசிரியரிடம் அறிவு
மகளிடம் மகழ்ச்சி
மனைவியிடம் நிம்மதி
இதற்காகவே
இவர்களிடம்
தோற்பது பிடிக்கும்.
                 

Wednesday 21 March 2012

முத்தம்

இருவரும் 
எவ்வளவு பேசினோம்
மொழிகள் வார்த்தைகளற்ற தருணம் 
இருவருக்கும் 
இடையில் உருவான 
புதிய மொழி 
அவள் கொடுத்த 
முத்தம் 
 

மழழை

 கள்ளமில்லா
கண்கள்
போலி இல்லா
சிரிப்பு 
பயமில்ல
பாசம்
பண்பறிவில்லா
குணம்
திறமில்லா
கை கால்கள் 

தோழி

எங்கோ வாசிக்கப்பட்டது

அவளது பெயர் 

என் 

மனம் அறியும் 

இருந்தும் 

கண்களில் தேடல்

அவள் 

முகம் காண ... 

அப்பா

நான்

உறங்கிக் கொண்டிருந்தேன்
 
திடிர் விழிப்பு 

சின்ன முனங்கள் 

கண்களை துடைத்து
 
இருளினை தடவி 

இடம் பெயர்ந்தேன் 

அப்பாவிடம் !

அரை மயக்கம் 

அசதியான உறக்கம் 

வார்த்தைகள் தெளிவில்லை 

எனது பெயரை 

அப்படி யாரும் உச்சரித்தில்லை 

இதுவரை 

அம்மா

மழைக்கு கூட

பள்ளி கூடம் ஒதுங்கியத்தில்லயம்

ஆனால்

மொழயின் உச்சரிப்பை
ஒலி பிறழாமல் ஓதியவள்

பல் முளைக்காத பருவம் 

கை - காதை தொடவில்லை
இருந்தும் 

பாடம் கற்று கொடுத்தாள்

படிக்காத ஆசிரியை 

கைக்கு எட்டாத காதை

தொட 

மறுநாள் 

முதலாம் வகுப்பு சேர்க்கை 

Monday 12 March 2012

மறந்தவை

உன்
பிறந்தநாளுக்கு நான்
கொடுத்த
கவிதை புத்தகத்தில்
ஆசிரியர் மறந்த கவிதை
உன் பெயர்